திருச்செங்கோட்டில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் துவக்கம்
தடகளப் போட்டிகள் துவக்கம்
திருச்செங்கோட்டில் மாவட்ட தடகள சங்கம், திருச்செங்கோடு கே.எஸ்ஆர் கல்வி நிறுவன ஒத்துழைப்புடன் நடத்தும் 37 வது மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப்போட்டிகள் நேறறு 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
இதன் துவக்க விழா கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட தடகள சங்கத் தலைவர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் வெங்கடாஜலபதி அனைவரையும் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை இயக்குனர் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் கலந்து கொண்டார் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகிய முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பிஆர்டி நிறுவனங்களை மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலர் தியாகராஜா பலரும் கலந்து கொண்டனர்.