எழில்மிகு கொல்லிமலை!

எழில்மிகு கொல்லிமலை!
X

கொல்லிமலை!

தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்களில் முக்கியமானதும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு பகுதியாக காணப்படுவதும் கொல்லிமலை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் உள்ளது. கொல்லிமலை மொத்தம் 70 கொண்டை பின் ஊசி வளைவுகளைக் கொண்டது இந்த மலைப் பகுதியில் மருத்துவ குணம் மிக்க பல அபூர்வமான மூலிகை செடிகள் நிறைந்துள்ளது இங்கு அறப்பளீஸ்வரர் கோவில், மூலிகை தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, வாசலூர்பட்டி படகு இல்லம், மாசி பெரிய சுவாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோவில், சிக்குப்பாறை வியூ பாயிண்ட், தொலைநோக்கி இல்லம், நம்ம அருவி, சந்தன அருவி சிற்றருவி என்று பல இடங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு சிறுதானிய வகைகளான தினை, வரகு, சோளம் அதிகமாக பயிரிடப்படுகிறது இங்கு தனித்துவமான மிளகு வகைகள், அன்னாசி, பலாப்பழம் அதிகமாக விளைகிறது. இங்கு மூட்டு வலி, சளி ஆகியவற்றை குணப்படுத்தும் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு அரிய வகையாக கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி18 அன்று வாழ்வில் ஓரி திருவிழா இங்குள்ள மக்களால் கொண்டாடப்படுகிறது, இது அரசு விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதமான காலநிலையை கொண்டுள்ளது இந்த கொல்லிமலை தொடர். கொல்லிமலையில் பல சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. புகழ் பெற்ற சித்தர்களான போகர், அகஸ்தியர் குகைகள் ஆகாய கங்கை அறிவிக்க செல்லும் வழியில் இருக்கிறது. மேலும் கொல்லிமலையை சுற்றிலும் பல சித்தர்கள் தவம் இருந்த குகைகள் உள்ளதாக இங்குள்ள பொது மக்களால் கூறப்படுகிறது. மேலும் கொல்லிமலையில் மாந்திரீகம், வசியம் போன்ற செயல்பாடுகள் அதிகமாக காணப்படுகிறது. இயற்கை எழில் மிகுந்த கொல்லிமலைக்கு சென்று வந்தால் நம் மனதுக்கு புத்துணர்ச்சியும், நேர்மையான எண்ணங்களும் கிடைக்கிறது.

Tags

Next Story