அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டுச்சேலை, பட்டுவேட்டி வழங்கப்படும்: ஈபிஎஸ்

EPS
சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் திருமண உதவித் திட்டம் தொடங்கப்படும், மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும். 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும், 4000 அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும், ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். கடந்த 7 மாதங்களில் 850 கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் கனவில் தான் மக்கள் வீடு கட்ட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது, விவசாயி, நெசவாளர்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் புயல் வெள்ளத்தின் போது கூட விலைவாசி உயர்வு இல்லை. மக்கள் நலனுக்காக செயல்படுவது அதிமுக, குடும்ப நலனுக்காக செயல்படுவது திமுக. கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தபோது அவர்களின் நலன் கருதி All pass போட்டது அதிமுக அரசு. ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமென்றால் யார் காலை வேண்டுமானாலும் பிடிக்கும் திமுக கட்சி. அவரவர் மதம், அவரவருக்கு புனிதமானது! அதில் ஒருபோதும் அஇஅதிமுக தலையிடாது. உதயநிதி பேசுவதை கொஞ்சம் நேரம் கேட்டால் உண்மை என நம்பிவிடுவீர்கள். பொய்யை தவிர்த்து உதயநிதி வேறு எதையும் பேசுவதில்லை. திறமையான மாணவர்களை உருவாக்கியது அதிமுக அரசு. அது பொறுக்க முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் லேப்டாப் திட்டத்தை நிறுத்தியது ஸ்டாலின் மாடல் அரசு. 2026 சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
