எடப்பாடியை ஓகே சொல்ல வைத்த பிரேமலதா - தேமுதிகவுக்கு 5 சீட் கன்ஃபார்ம்

எடப்பாடியை ஓகே சொல்ல வைத்த பிரேமலதா - தேமுதிகவுக்கு 5 சீட் கன்ஃபார்ம்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் உறுதி   

அதிமுக கூட்டணியில் மத்திய சென்னை, திருவள்ளூர்(தனி), விருதுநகர், கடலூர், தஞ்சை ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

லோக் சபா தேர்தலில் அதிமுகவின் கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, 5 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக் சபா தேர்தல் அறிவித்ததில் இருந்து, அதிமுக உடன் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை நடந்தியது. கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி கட்சிகள் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும் என கூறி வந்தார். இதனால் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்தது.

அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய அதேநேரம், பாஜகவுடன் தேமுதிக கூட்டனி பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகளை பாஜக தர மறுத்ததால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. தேமுதிக கூட்டணி அதிமுக உடனா அல்லது பாஜக உடனா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இன்று முடிவுக்கு வந்தது. இன்று அதிமுக உடன் கூட்டணி ஒப்பந்தத்தை தேமுதிக உறுதி செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் மத்திய சென்னை, திருவள்ளூர்(தனி), விருதுநகர், கடலூர், தஞ்சை ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோர் ஈடுபட்டனர். அதன்பின்னரே, தேமுதிக கூட்டணி உறுதியானது.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “அதிமுக., - தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க., உடன் கூட்டணி தொடரும். நாளை முக்கியமான அறிவிப்பு தே.மு.தி.க., அலுவலகத்தில் அறிவிப்பு வெளியாகும்” இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story