அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழக அரசை அவதூறாக பேசிய புதிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர். ஏற்கனவே நான்கு வழக்குகளை தொடரப்பட்ட வழக்குகளில் இரண்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் மேலும் இரண்டு அவதூர் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,
கடந்த 20. 7. 2023 அன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் முதல்வரையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் புகார் அளித்ததன் பேரில் தொடரப்பட்ட புதிய வழக்கில் சம்மன் கிடைக்கப்பெற்று இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேரில் ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அமைச்சரின் வழக்கறிஞர் ராதிகா செந்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வழக்கை மூன்று மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
அதற்கு நீதிபதி உங்களது வக்காலத்தை 19ஆம் தேதி முன்வைக்குமாறு உத்தரவிட்டார். இதனை எடுத்து இவ்வழக்கு வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.