கொடைக்கானலில் பால பாரதி வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரித்த பால பாரதி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளராக திமுகாவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அதனை தொடர்ந்து இன்று கொடைக்கானல் நாயுடுபுரம்,
அண்ணாசாலை ஆகிய பகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தம் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பால பாரதி தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசியது கணவன் தவறு செய்தால் மனைவியை காவல் துறையினர் அழைத்து சென்றுவிடுவர்,அதே போல மகன் தவறு செய்தால் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுவிடுவார்,அது போல் மாதிரி தமிழ் நாட்டு மக்கள் பாஜகவை ஏற்கவில்லை என்பதற்காக திமுக அரசை பினைகைதியை போல மத்திய அரசு நடத்துவதாக குற்றம் சாட்டினர், மேலும் ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சரை சிறையில் வைத்துள்ளது பாஜக அரசு என்றும், டெல்லியின் முதல் அமைச்சர்,
துணை முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரையும் சிறையில் அடைத்து விட்டு மோடி இங்கு வந்து ரோட் ஷோ நடத்துகிறார் என தெரிவித்தார். ஒரு காலத்தில் மன்னர்கள் சாலையில் நடந்து வந்தால் ,சாலையின் இரு புறங்களிலும் மக்கள் நின்று கொண்டு குனிந்த படி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவர், அது போல இப்போது மோடியும் , அமிட்சாவும் சாலையில் வாகனத்தில் வரும் போது மக்கள் அவர்களுக்கு ஒதுங்கி நின்று வணக்கம் சொல்லவேண்டும், ஆகவே இப்படி ரோட் ஷோ நடத்தும் மோடி ஷோக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார். கேரளாவில் ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் ஏற்பதாகவும், தமிழகத்தில் அவரை ஆதரிப்தாகவும் சிலர் பேசி வருகின்றனர்.
மேலும் கேரளாவில் இரண்டு பேரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் பிரதமராக அறிவிக்கப்படலாம், என்றும் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராகவும் இருக்க போகிறாரா, இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு யாரை பிரதமராக அறிவிக்கின்றனரோ அவரே பிரதமர் என தெரிவித்தார். மேலும் தமிழ் நாட்டு மக்களே ஒரு தொகுதியை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கின்றனர். அது அண்ணாமலை டெபாசிட் போனால் அது தான் மக்களுக்கு உண்மையான தீபாவளி, கிருஸ்துமஸ், ரமலான் பண்டிகை என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, தமமுக ஆகிய கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.