நாச்சியார்கோயில் குத்துவிளக்கு பெயரில் போலி:பாமக வேட்பாளரிடம் கோரிக்கை

நாச்சியார்கோயில் குத்துவிளக்கு பெயரில் போலி:பாமக வேட்பாளரிடம் கோரிக்கை
வேட்பாளரிடம் கோரிக்கை வைத்த தொழிலாளர்கள்
நாச்சியார் கோயில் குத்துவிளக்கு என்ற பெயரில் வரும் போலி குத்துவிளக்கு தயாரிப்புகளை கட்டுப்படுத்த கோரி பாமக வேட்பாளரிடம் குத்துவிளக்கு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நாச்சியார் கோயில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது உலகப் புகழ்பெற்ற நாச்சியார் கோயில் குத்து விளக்கு தயாரிப்பு தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பாண்டியன் என்பவரின் பட்டறைக்குச் சென்ற வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்துவிளக்கு செய்யும் முறையையும், அவர்களோடு அமர்ந்து குத்துவிளக்கு செய்தும் அரசால் என்ன உதவி தங்களுக்கு வேண்டும் என்றும் கேட்டார் தொடர்ந்து குத்து விளக்கு தொழிலாளர்கள் வேட்பாளர்களிடம் கூறுகையில்,

நாச்சியார் கோயில் குத்துவிளக்கு என்ற பெயரில் கள்ளச் சந்தையில் போலி குத்துவிளக்குகள் விற்பனையாகின்றது இதனால் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர் மேலும் கும்பகோணம் மாவட்டம் வேண்டி தொடர்ந்து போராடிவரும் போராட்டக்காரர் ம.க. ஸ்டாலின் எங்களின் கோரிக்கையை ஏற்று எங்களின் தேவையை உணர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில்,

வெற்றி பெற்று போராடியாவது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

Tags

Next Story