தி.மு.க. இளைஞரணி மாநாட்டு திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைப்பு

தி.மு.க. இளைஞரணி மாநாட்டு திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைப்பு

பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டு திடலில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 100 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டு திடலில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 100 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 17 ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2 வது மாநில மாநாடு விமரிசையாக நடைபெற உள்ளது. மாநாட்டை முன்னிட்டு குமரியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பிரசார ஊர்வலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாநாட்டு திடலில் முடிவடைந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெத்தநாயக்கன் பாளையத்தில் முகாமிட்டு தினந்தோறும் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டிற்காக பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநாட்டை 5 லட்சம் பேர் பார்க்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளை தி.மு.க. இளைஞரணியினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 1 ½ லட்சம் பேர் அமரக்கூடிய பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் உணவருந்த கூடிய அளவில் உணவு அருந்தும் கூடம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கார் பார்க்கிங் வசதி, சாலை வசதி போன்றவை சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்கும் பணி நேற்றிரவு நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி.என்.செல்வகணபதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஏ. ஆறுமுகம் ஆகியோரது தலைமையில் கொடிக்கம்பம் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் வெள்ளாளப்பட்டி மூர்த்தி அன்பு என்கிற மருதமுத்து, சிவராமன் ,பெத்தநாயக்கன் பாளையம் பேரூர் செயலாளர் வெங்கடேசன், ஏத்தாப்பூர் பேரூர் செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story