ராஜகிரியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கல்

ராஜகிரியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கல்

திமுகவினர் கொண்டாட்டம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி ராஜகிரியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி ராஜகிரியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர் தமிழகம் மற்றும் புதுவை திமுக தலைமையிலான கூட்டணியில் 40-க்கு 40 வெற்றி பெற்றது.

மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்.

பாபநாசம் திமுக ஒன்றிய செயலாளர் நாசர் தலைமை வகித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முபாரக் உசேன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன்,

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பரித் கான், ராஜகிரி திமுக முன்னோடி பாலு, ஒன்றிய துணை செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மதி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் அசோக்குமார், கிளை செயலாளர்கள் அண்ணாதுரை, ரகமத்துல்லா,

ஷாஜகான், முகமது ஃபாருக், சிக்கந்தர், சாதிக், பரித் மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ், தாவூஷா சித்திக், மாலிக், கௌஸ் மைதீன், மதினா சாகுல், பாட்ஷா கனி மற்றும் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story