திமுக இளைஞரணி மாநாட்டு: நாகையில் பைக் பேரணி

திமுக இளைஞரணி மாநாட்டு: நாகையில் பைக் பேரணி

பைக் பேரணியில் கலந்து கொண்டவர்கள்

சேலத்தில் 21 ஆம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு நாகையில் இருந்து பைக் பிரச்சார பேரணியை மாவட்ட தி.மு.க. செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.

தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் 21.1.2024 ஞாயிறு அன்று தி.மு.க.இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர் அணியினர் வெண் சீருடையில் கலந்து கொள்கின்றனர் இந்த மாநாட்டிற்கு நாகையிலிருந்து 25 மேற்பட்ட இளைஞர்கள் பைக்கில் பிரச்சாரம் செய்து கொண்டு சேலம் செல்கின்றனர்.

இந்த பைக் பிரச்சார பேரணியை நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என் கௌதமன் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் மகா குமார் உன்னிடம் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story