கும்பகோணத்தில், கட்சி கொடி விற்பனை மந்தம்

கும்பகோணத்தில், கட்சி கொடி விற்பனை மந்தம்

கட்சி கொடி விற்பனை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கும்பகோணத்தில், கட்சி கொடி விற்பனை மந்தமாக உள்ளது.

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கும்பகோணத்தில், கட்சி கொடி விற்பனை மந்தமாக உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி 27-ந் தேதி நிறைவு பெற்றது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடந்தது.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியின் கூட்டணி கட்சியினர் தங்கள் தொகுதி முழுவதும் பிரசாரங்கள் செய்து வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம்,

பரிசுப்பொருட்களை வினியோகப்பதை தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் கார்களில் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் கட்சி கொடிகளையும் அகற்றி வருகின்றனர்.

தேர்தல் கட்சியினர் போட்டிப்போட்டு கொண்டு தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலுக்காக கும்பகோணத்தில், பல்வேறு கட்சியினர் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் கட்சிகளின் கொடிகள் உற்பத்தி மற்றும் விற்பனை பரபரப்பாக தொடங்கி நடக்கும். இதனை உற்பத்தி செய்யும் இடத்திலும் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு அதனை வாங்க செல்வார்கள்.

தேர்லுக்கும் இன்றும் சில வாரங்களே உள்ளன. அதேபோல் கட்சிகொடிகள், மப்ளர், விற்பனைகடைகளில் கூட்டணி போட்டு தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் கட்டுபாடு காரணமாக செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற நிலையில் கட்சியினர் உள்ளனர். இதனால் போதிய அளவு விற்பனை இல்லாமல் அவை கடைகளின் வாசலில் தொங்க விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கட்சி கொடி விற்பனையாளர்கள் கூறுகையில், கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் தோரணைகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், சுமார் 40 அடி நீளம் உள்ள பேப்பரால் ஆன தோரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு கட்சி கொடிகளும் அதன் அளவுகளுக்கு ஏற்ப ரூ.8 முதல் ரூ.200 வரை விற்பனை ஆகிறது. பருத்தி நூல் விலை மற்றும் இதர பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. தேர்தல் தொடங்கி விட்டாலே தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை விருவிருப்பாக நடக்கும். ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கட்சி கொடிகள்,

மப்ளர் ஆகியவை விற்பனை மந்தமாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட இவ்வாறு விற்பனை மந்தமாக இருந்தது இல்லை. வழக்கமாக தேர்தல் ஓட்டு சேகரிப்பு, பிரசார கூட்டங்கள் என கட்சி கொடிகளின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். ஆனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டினால் அவை வாங்க யாரும் முன்வரவில்லை. கடைகளிலும் கட்சிகளுக்கு விளம்பரம் ஏற்படும் வகையில் எந்த கட்சி கொடியையும் அதிகளவில் தொங்க விட வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை விற்பனை என்பது மந்தமாக உள்ளது. இனி வரக்ககூடிய 10 நாட்களில் தான் அதன் விற்பனை என்ன? என்பது தெரியும் என்றனர்.

Tags

Next Story