ஜெயலலிதா நினைவு தினம் - மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை

ஜெயலலிதா நினைவு தினம் - மாநகர் மாவட்ட செயலாளர்  அறிக்கை

ஜெயலலிதா நினைவு தினம் - மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை

ஜெயலலிதா நினைவு தினம் - மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் வரும் 5 ம் தேதி செவ்வாய்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதேபோல் நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளார்

Tags

Next Story