கிங் ஊடக உண்மை செய்தி எதிரொலி - நாமக்கல் அதிமுக வேட்பாளர் ரிட்டன்ஸ்
*கிங் ஊடக உண்மை செய்தியை பொய்யாக்க அதிமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி கட்டாய டிஸ்சார்ஜ்ஜாகி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்*
அதிமுக நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராஹா சு. தமிழ்மணி சிறுநீரகத் தொற்று காரணமாக கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கட்டாய டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். .அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோருடன் சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நாமக்கல் அதிமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி கடந்த சில தினங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் திருச்செங்கோடு பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக கோவை பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கிரியெட்டின் மற்றும் பொட்டாசியம் அளவு உயர்ந்து சிறுநீரக செயல்பாடு பாதித்துள்ளதாக கூறி டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனை அடுத்து அவரது பிரச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் குணமடைந்து வீடு திரும்பியவுடன் மீண்டும் பிரச்சாரத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வேட்பாளர் சு.தமிழ்மணி சிகிச்சை பெற்று வரும் செய்தியை கட்சி நிர்வாகிகள் ரகசியமாக வைத்திருந்தனர். இந்த செய்தியை நமது கிங் ஊடகம் வெளியிட்டது. இச் செய்தியை வெட்ட வெளிச்சமாக்க காரணமாக இருந்த கிங் ஊடக செய்தியை மாற்றி அமைக்கும் வகையில் அதிமுக முக்கிய தலைவர்கள் வேண்டுகோளின் படி, மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி வேட்பாளர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுவதற்கு தேர்தல் அரசியலுக்காக கட்டாய டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணி அளவில் பரமத்தி வேலூர் தொகுதி பொத்தனூர் பேரூராட்சியில் வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி திடீரென தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி, திரைப்பட இயக்குனர் ஆர் வ உதயகுமார், நடிகர்கள் அனு மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊடக தர்மத்தை கடைபிடிக்கும் வகையில் தனிநபர் ஒருவரின் முழு தகவலை வெளியிடாமல் இருக்கும் கிங் ஊடக செய்தியை உண்மை இல்லை என கூறும் அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர் விருப்பப்பட்டால் அவரது மருத்துவ சிகிச்சையின் உண்மை நிலையை வெளியிட *கிங் ஊடகம்* தயாராக உள்ளது.