மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம்

மதிமுக  வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம்

தீப்பெட்டி சின்னம்

மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது.

இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். இந்தநிலையில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் விசிக, தலைவர் திருமாவளவன், ஓபிஎஸ் ஆகியோர் தனிசின்னங்களுக்காக சுயேட்சைகளாக போட்டியிடுகிறார். இவர்களுக்கு சின்னம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

Tags

Next Story