மகாபெரியவர் மீது எம்ஜிஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்: அதிமுக வேட்பாளர்

மகாபெரியவர் மீது எம்ஜிஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்: அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் வழிபாடு

தேர்தலில் வெற்றி பெற விசேஷ பிரார்த்தனையை மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் மேற்கொண்டார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் திருக்கோவிலில் தேர்தலில் வெற்றி பெற விசேஷ பிரார்த்தனையை மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் மேற்கொண்டார்.

அப்பொழுது அவருக்கு அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஏழு சாஸ்திரிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் விசேஷ பிரார்த்தனை செய்து தீபாராதனை காட்டும் பொழுது மழை பெய்தது அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் பரிவட்டம் கட்டி தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் சரவணன் கூறியதாவதுநான் அடிக்கடி காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்வேன். தற்பொழுது தேர்தல் நேரத்தில் கடுமையான பிரச்சாரம் இருந்தாலும் தற்போது இங்கே பிரார்த்தனை செய்யும்போது எனது மனம் அழுத்தம் குறைந்து விடுகிறது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் அதற்கு அச்சாரமாக இந்த தேர்தல் அமையும். எடப்பாடியாரின்,

தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடைய பிரார்த்தனை மேற்கொண்டேன் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் மீது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிகுந்த பாசம் வைத்துள்ளார், அதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்லலாம். ஒரு சமயம் தமிழகத்தில் கடுமையாக வறட்சி ஏற்பட்டு மழை பெய்யவில்லை அப்போது தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி காஞ்சிஸ்ரீ மகா பெரியவரிடம் புரட்சி தலைவர் கோரிக்கை வைத்தார் அதனை தொடர்ந்து உடனடியாக மழை பெய்தது. தற்போது,

இங்கே நான் தரிசிக்க வரும்பொழுது மழை பெய்துள்ளது காஞ்சி மகா பெரியவரின் கருணை மழை இன்றைக்கு அதிமுகவிற்கு கிடைத்துள்ளது அது மட்டுமல்ல காஞ்சி மகா பெரியவர் சமைக்கும் பொழுது ஒரு பிடி அரசியை எடுத்து வைக்க வேண்டும் அந்த அரிசியை கோவில் மற்றும் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். அதேபோலத்தான் புரட்சித்தலைவர் ஏழை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை வழங்கினார்.

இந்த கோவிலுக்கு நான் வந்த போது எனக்கு மனம் அமைதி ஏற்படும், அதேபோல் பேட்டரி ரீசார்ஜ் செய்து போல இருக்கும்,நம்மை விட உயர்ந்த தெய்வங்கள் தான்.இந்து அறநிலை துறையை திமுக சரியாக செயல்படுத்தவில்லை,திமுக அரசுக்கும் அறநிலையதுறைக்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. இந்த துறையின் மூலம் சாஸ்திரிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 2026 ஆண்டில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் இதுக்கெல்லாம் ஒரு விமோசனம் போல அமையும். செல்லும் இடங்கள் எல்லாம் மக்களதன் எழுச்சியாக வரவேற்பு தருகிறார்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல இந்த தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என கூறினார்.

Tags

Next Story