எதிரெதிர் துருவங்கள் ஒரே இடத்தில்: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திருமாவளவன்
அரியலூர், ஏப்.12- விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்பானை பகுதி குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டி வாழ்த்து தெரிவித்து பானை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்,
பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
வாக்குப்பதிவிற்கு ஒரு வாரம் காலம் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தனது பிரச்சாரங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று,
மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு பதில் அளித்து பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாடாளுமன்றத்தில் 69 விவாதங்களில் தான் பேசி உள்ளதாகவும், ஆறு தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளதாகவும் கூறிவருகிறார்.
ஒரு நாளில் மூன்று மணி நேரம் தூக்கம் போக, மற்ற 21 மணி நேரமும் பொதுமக்களுடன் இருப்பதாகவும், பொது மக்களின் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று எதிரெதிர் துருவங்களாக உள்ள விசிக மற்றும் பாஜக கட்சிகள்,
ஒரே இடத்தில் காலை மாலை பிரச்சாரம் மேற்கொள்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை 8 மணிக்கு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலனக்குழி கிராமத்தில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அவர் காடுவெட்டி, எறவங்குடி, கொடுகூர், இடையங்குறிச்சி, கல்லாத்தூர், சின்னவளையம், ஜெயங்கொண்டம் நகரம், உடையார்பாளையம் நகரம் உள்ளிட்ட 94 இடங்களில் இன்று தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று மதியம் 2.50 மணிக்கு அதே மீன் சுருட்டி மேல னக்குழியில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அவர் மேலனக்குழி, காடுவெட்டி, எறவங்குடி, சின்னவளையம், ஜெயங்கொண்டம் நால் ரோடு, சுத்தமல்லி, காசாங் கோட்டை, சாத்தம்பாடி, விக்கரமங்கலம் வழியே சென்று, மீண்டும் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள 8 வார்டுகளிலும் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இரவு10 மணிக்கு பிரச்சாரத்தை முடிக்கின்றார்.விசிக மற்றும் பாஜக வேட்பாளர்கள் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஒரே நாளில் ஒரே இடத்தில் காலையும், மதியமும் பிரச்சாரம் மேற்கொள்வதால், பிரச்சார பயணத்தில் வேட்பாளர்களுடன் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் அரியலூர் மாவட்டத்தில் இன்று லேசான மழை பெய்யும் என்று கூறியுள்ள நிலையிலும் லேசான மழையாக பெய்தது வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்ல் நிலவியது தற்பொழுது வேட்பாளர்களின் பிரச்சாரத்தால் அரியலூர் மாவட்டம் அனலாய்க் கொதிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பயணத்தின் போது குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டி வாழ்த்து தெரிவித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்