பேராசிரியா் அன்பழகன் பிறந்தநாள் மலரஞ்சலி

பேராசிரியா் அன்பழகன் பிறந்தநாள் மலரஞ்சலி

பேராசிரியா் அன்பழகன் பிறந்தநாள் மலரஞ்சலி - அமைச்சா்கள், மாவட்ட செயலாளா் அஞ்சலி செலுத்தினா்

பேராசிரியா் அன்பழகன் பிறந்தநாள் மலரஞ்சலி - அமைச்சா்கள், மாவட்ட செயலாளா் அஞ்சலி செலுத்தினா்

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் 102 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் முன்னாள் கழக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவா் மா.மதிவேந்தன் ஆகியோர் பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார் ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், திருச்செங்கோடு ஒன்றிய குழு துணை தலைவர் ராஜவேல் (எ) ராஜபாண்டி, சார்பு அணி நிர்வாகிகள் ஆர்.பாலாஜி, பாலசுப்பிரமணியம், ரமேஷ், நவலடி ராஜா, கௌதம், சுந்தர், கருணா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story