அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை சிவசங்கர் பிடித்துவிட்டார் - அண்ணாமலை விமர்சனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை சிவசங்கர் பிடித்துவிட்டார் - அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை விமர்சனம்

அமைச்சர் சிவசங்கரின் ஊழலை அடுக்கிய அண்ணாமலை . அரியலூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்று ஈடுபட்டார். நேற்று பிற்பகல் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் மாரியம்மன் கோயிலின் அருகிலிருந்து யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, பேருந்து நிலையம் அருகே முடித்தார்.அப்போது மது இல்லா தமிழகம், கொலை, கொள்ளை இல்லா தமிழகம் உருவாக பாஜக யாத்திரை மேற்கொண்டுள்ளது. ஆனால், திமுக அரசு தீபாவளிக்கு இலக்கு வைத்து மது விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக தீபாவளி சமயத்தில் மட்டும் தமிழகத்தில் 20 கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 1997-ல் கையகப்படுத்திய 8,373 ஏக்கர் நிலத்தை 36 ஆண்டுகள் கழித்து தற்போது விவசாயிகளிடமே ஒப்படைப்பதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் அரியலூர் மாவட்டம் வளர்ச்சி பெற்றிருக்கும்.

தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. இவ்வாறு அனைத்து விதத்திலும் தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்றார்.

அரியலூர் ஒற்றுமைத்திடலில் யாத்திரையை தொடங்கிய அவர் அண்ணா சிலை அருகே பேசியபோது அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை இப்போது அமைச்சர் சிவசங்கர் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டம் வளர்ச்சி குறியீட்டில் கடைசி இடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்படி

மகனுக்காகவும் மருமகனுக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் செயல்படுகிறாரோ அதேபோல அமைச்சர் சிவசங்கர் அவரது மனைவிக்காக செயல்படுகிறார் என்றும் சிவ சங்கர பற்றிய தவறுகளை மட்டும் நாங்கள் பட்டியலிடுகிறோம் என்று தெரிவித்து பட்டியலிட்டார். தமிழ்நாட்டுடைய போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து கொண்டு தகுதியற்ற போலி நிறுவனங்கள் மூலம் 1276 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் வேக கட்டுப்பாட்டு கருவி மாசு கட்டுப்பாடு சோதனை இயந்திரம் வாங்கியது மூலம் 783 கோடி ஊழல் செய்துள்ளார் அவரது மனைவிக்கு சொந்தமான செயற்கை கருத்தரிப்பு மையத்து விளம்பரத்தை பேருந்தின் பின்பக்கம் ஒட்டி உள்ளார் இந்திய பிரதமராக மோடி வந்த பிறகு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜ சாமி சிலை உட்பட 351 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது தமிழகத்தில் திராவிடம் ஆடல் ஆட்சி நடைபெறவில்லை டாஸ்மாக் மாடல் ஆட்சி நடக்கிறது இன்னும் நான்கு மாதத்தில் இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார் கர்நாடகாவில் பாஜக அரசு ஆட்சியில் இருந்தவரை காவிரி நீர் பிரச்சனை இல்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்கவில்லை கடந்த ஆண்டு மத்திய அரசு 8 லட்சத்து 36 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு ஐந்து லட்சத்து 21 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது இந்த இரண்டும் மாநில அரசு சேர்ந்து இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என பேசினா. இப்படி பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது, பணியிடமாற்றம், நெடுஞ்சாலை உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவது போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இங்கு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-யால் சிதம்பரம் மக்களவை தொகுதி தத்தளித்து வருகிறது.

ஊழலில் செந்தில் பாலாஜி இடத்தை முழுமையாக நிரப்பி உள்ளார் அமைச்சர் சிவசங்கர் என பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார் அண்ணாமலை.அதை மாற்றி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாஜக ஆதரவு பெற்ற எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும் என அண்ணாமலைசிவசங்கரை விமர்சித்து திமு க வினரை சீன்டியுள்ளார்.

Tags

Next Story