Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - கண்ணீரில் ரசிகர்கள்

Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - கண்ணீரில் ரசிகர்கள்

vijayakanth

விஜயகாந்த் மறைவை ஒட்டி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நிலை குறைவால் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட விஜயகாந்த் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை கூறுகிறது. இதனால், தேமுதிக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கண்ணீருடன் சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் குவிந்து வருகின்றனர்.

கடந்த மாதம் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததாக கூறி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், கடந்த 26ம் தேதி திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது: விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச.28) தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Tags

Next Story