ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் நாங்கள் வரவேற்போம்: இளங்கோவன்
ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , பாரளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழகம் வந்து சென்றுள்ளதாகவும்,
முகமது கஜினி இந்தியாவுக்கு பலமுறை வந்து கொள்ளையடித்து சென்றது போல இப்போது மோடி தமிழகத்திற்கு படையெடுத்து வருவதாகவும் , மோடி உட்பட எத்தனை அமைச்சர்கள் தமிழகம் வந்தாலும் பாஜக வெற்றி பெற போவதில்லை என்றார்.
காமராஜர் பற்றி மோடி பேச துளிக்கூட அருகதை இல்லை என்ற EVKS இளங்கோவன் , இந்த தேர்தலோடு மோடி யோடு சேர்ந்து அண்ணாமலையும் காணாமல் போய்விடுவார் என்றார். மது கடைகள் தெருக்கள் தோறும் வருவது முன்னேற்றம் தான் என்றும் இந்தியாவில் எல்லா பகுதியில் குடிப்பார்கள் இருப்பதால் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றால் நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும் என்றார்.
ராகுல் பிரதமராக வந்தாலும் சரி ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் சரி நாங்கள் வரவேற்போம் என்றும் மோடி தவிரை யார் வந்தாலும் சரி என்றும் என்னை பொறுத்தவரை ராகுல்காந்தி ஸ்டாலின் இருவரும் ஒன்று தான் என்றார். அதிமுக உடைக்க அழிப்பதற்கு என்ன இருக்கிறது சசிகலா தினகரன் ஓபிஎஸ் ஆகியவற்றால் பிரிந்து உள்ளது வரும் காலத்தில் தங்கமணி , வேலுமணியாக பிரிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.