கடிதத்தில் உள்ள உண்மையை கூறாமல் அவதூறு பரப்புவதா?: செல்வப்பெருந்தகை கேள்வி

X
செல்வப் பெருந்தகை
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் வரை அதைப் பற்றி பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பி.எம்.ஸ்ரீ பள்ளி குறித்து ஆராய அமைத்த குழு அளிக்கும் பரிந்துரையில் முடிவு எடுப்போம் என அரசின் கடிதத்தில் உள்ளது. 2024 மார்ச் 15ல் தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தை படித்தாலே அதன் அர்த்தம் புரிந்துவிடும். தமிழ்நாடு அரசு மொழிக் கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுவதெல்லாம் எந்த வகையில் நியாயம். அன்புமணி போன்றவர்கள் கடிதத்தில் உள்ள உண்மையை மக்களுக்கு தெரிவிக்காமல் அவதூறு கூறுவதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story