ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு!!

X
ஆந்திராவில் அல்லூரி சீதாராமா ராஜு மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். பத்ராசலம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னாவரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 15 பேர் உயிரிழந்த நிலையில் பேருந்து விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
