பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் இதுவரை 60 வழக்குகள் பதிவு!!

பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் இதுவரை 60 வழக்குகள் பதிவு!!

சீமான் 

பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில சொற்களை கூறினார். தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுளன. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளது. கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Next Story