ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; ரூ.63,000-ஐ தாண்டியது!!

X
gold
சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,000ஐ தாண்டியது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7,705க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61,640க்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.760 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905க்கு விற்பனையாகிறது.
Next Story