வங்கக்கடலில் அடுத்த இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

X
புயல்
தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கணினி மாதிரிகள் அடிப்படையில் நாளை மத்திய வங்கக்கடலிலும் டிசம்பர் 2வது வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால் இவை இரண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை எனவும் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
