ஃபெஞ்சல் புயல் எதிரொலி - தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
National Disaster Response
புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாகை,செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையில் இருந்து, 30 பேர் கொண்ட 11 குழுக்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்தன.
Next Story