அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவ, மாணவிகள் கடிதம்
stalin
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், 22 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் கல்வி பயின்று வரும் 5,380 மாணவர்கள் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். குறிப்பாக ஊரக பகுதிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். காலை நேரங்களில் அவசரம், அவசரமாக வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் இனி தங்களது குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கமுடியவில்லையே என கவலை அடைய மாட்டார்கள். எங்களை போன்ற மாணவர்களை முதல்வரின் காலை உணவு திட்டம் பார்த்து கொள்ளும் என்றனர்.
Next Story