இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு.!
இந்தியா - இலங்கை
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல் ரோஹித் சர்மா - கம்பீர் கூட்டணி முதல்முறையாக களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் இலங்கை கேப்டன் அசலங்கா பேசுகையில், நாங்கள் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இந்தப் போட்டியில் 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனில் களமிறங்குகிறோம். மனதளவில் முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளோம். டி20 தொடரில் சில மறக்க முடியாத தவறுகளை செய்துள்ளோம்.
கேப்டனாக வீரர்களின் காயத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இம்முறை மீண்டும் தவறுகளை செய்யக் கூடாது என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், இந்த மைதானத்தில் ஏராளமான போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளது. விராட் கோலி, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் கம்பேக் கொடுத்துள்ளனர். அதேபோல் சிவம் துபேவும் விளையாடவுள்ளார்.
இலங்கை பிளேயிங் லெவன்: நிசாங்கா, ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா, லியனாகே, ஹசரங்கா, வெல்லாலகே, தனஞ்செயா, அஷிதா ஃபெர்னாண்டோ, முகமது ஷிராஸ்