இந்திய அணி வீரர்களிள் எங்களை விட திறமையாக விளையாடினர் - பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணி வீரர்களிள் எங்களை விட திறமையாக விளையாடினர் - பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கான 192 ரன்களை அபாயகரமான பிட்சில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தொடரை 3-1 என்று இந்தியா வென்றது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் புதிய வீரர்கள் அபாரமாக ஆடினர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்திறன் பற்றி பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: “இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் பிட்ச் பேட்டிங் செய்ய சாத்தியமற்று இருந்தது என்று நான் கூற வர மாட்டேன். என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. ஆனால் நேற்று மிகமிகக் கடினமாக இருந்தது என்றுதான் கூற வேண்டும். திறமை அளவில் பார்த்தால் இந்திய அணி வீரர்களின் திறமை எங்களை விட சிறப்பாக இருந்தது என்றுதான் கூற வேண்டும்." என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story