சா்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 18 பதக்கங்கள்

சா்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 18 பதக்கங்கள்

சா்வதேச பாரா பாட்மின்டன்

இங்கிலாந்தில் நடைபெற்ற 4 நாடுகள் சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 18 பதக்கங்கள் கிடைத்தன.

இதில் கிருஷ்ணா நாகா் (ஆடவா் ஒற்றையா்), பிரமோத் பகத்/சுகந்த் கடம் இணை (ஆடவா் இரட்டையா்), மானசி ஜோஷி/துளசிமதி முருகேசன் (மகளிா் இரட்டையா்) ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

பிரமோத் பகத் (ஆடவா் ஒற்றையா்), நித்யஸ்ரீ (மகளிா் ஒற்றையா்), மனோஜ் சா்காா்/தீப் ரஞ்சன் பிசோயீ (ஆடவா் இரட்டையா்), சிராக் பரேதா/ராஜ் குமாா் (ஆடவா் இரட்டையா்), பிரமோத்/மனீஷா ராம்தாஸ் ஜோடி (கலப்பு இரட்டையா்) ஆகியோா் வெள்ளிப் பதக்கம் பெற்றனா்.

நிதேஷ் குமாா் (ஆடவா் ஒற்றையா்), சுகந்த் கடம் (ஆடவா் ஒற்றையா்), மானசி ஜோஷி (மகளிா் ஒற்றையா்), மன்தீப் கௌா் (மகளிா் ஒற்றையா்), மனீஷா ராம்தாஸ் (மகளிா் ஒற்றையா்), நிதேஷ்/தருண் தில்லன் (ஆடவா் இரட்டையா்), பாருல் சௌதரி/சந்தியா (மகளிா் இரட்டையா்), கிருஷ்ணா/நித்யஸ்ரீ (கலப்பு இரட்டையா்), மானசி/ருத்திக் ரகுபதி (கலப்பு இரட்டையா்), பிரேம்/எமினே (கலப்பு இரட்டையா்) ஆகியோருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

Tags

Next Story