PRD ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு பொருட்கள்

PRD ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு PRD ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவிகளுக்கு PRD ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் PRD நிறுவனங்களின் தலைவர் டி. பி தங்கராஜ் வழங்கி, பேசினார். அப்போது அவா் பேசுகையில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விளையாட்டுத்துறையிலும் சிறந்த விளங்க PRD நிறுவனங்கள் மற்றும் PRD ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக இந்த உபகரணங்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வேண்டும் என T.P.தங்கராஜ் கேட்டு கொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தமிழி மற்றும் ஆசிரியர்கள் PRD ஸ்போர்ட்ஸ் கிளப் கிருஷ்ணமூர்த்தி,முகமது கவுஸ், ரத்தினம், வெங்கடேஸ், செந்தில், சீனிவாசன், பாலகிருஷ்ணன், சங்கர், சுரேஷ், கனகராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story