உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை - ஏராளமான பெண்கள் பங்கேற்பு.

உலக நன்மை வேண்டி நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் ஸ்ரீ வள்ளலார் சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் உலகம் அமைதி பெற வேண்டியும், பொதுமக்கள் நலம் பெறவும் 1008 திருவிளக்கு பூஜை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக 1008 திருவிளக்கு பூஜையில் சிவாசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை, பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. பூஜையில் உலக நன்மை வேண்டி,நாலும் நாம் நலம் பெற,தொழில் பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் பெற சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த 1008 திருவிளக்கு பூஜை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார், சிவஸ்ரீ ஸ்ரீ மது சிவாச்சாரியார் சிறப்பாக நடத்தினர். இதில் ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுள்ளனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை குறித்த மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story