நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்வாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பின்னர் சுவாமி கோவிலில் இருந்து திருகல்யாண திருவிழாவிற்காக அம்பாள் கோவில் எழுந்தருளியுள்ள காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.தொடர்ந்து தங்க பூங்கோவில் சப்பரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட காந்திமதி அம்பாள் திருக்கோவில் யானை காந்திமதி முன் செல்ல கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கொடி பட்டம் பல்லக்கில் கோவில் உப்பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டு திருக்கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க பஞ்சவாத்தியம் இசைக்க நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு பால்,தயிர்,மஞ்சள் இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு காலை மாலை இரண்டு வேலைகளையும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்பாள் எழுந்தருளி சிறப்பு திருவீதி உலாவும் நடைபெறுகிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பா நதியில் தபஸ் இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வரும் 8ம் தேதியும் .,சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் 9ம் தேதி அதிகாலையும் நடைபெறுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story