வியப்பூட்டும் குமரிக் கோவில்கள் !

வியப்பூட்டும் குமரிக் கோவில்கள் !

வியப்பூட்டும் குமரிக் கோவில்கள் !

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இந்தியாவின் புனித தீர்த்தங்களின் ஒன்றாக கருதப்படும் கன்னியாகுமரியில் கோயில் கொண்டுள்ள தெய்வம் பகவதி அம்மன்.

சுசீந்திரத்தில் குடிகொண்டுள்ள தானுமாலாய கடவுள் குமரி பகவதியை மணக்க விரும்பினார் ஆனால் முகூர்த்த நேரம் தாண்டி யதால் திருமணம் தடைப்பட்டு விட்டது அதனால் இனி திருமணமே வேண்டாம் என்ற முடிவெடுத்த குமரி பகவதி இங்கு கன்னி தெய்வமாக விளங்குகிறார். தலையில் வைர கிரீடம் மூக்கில் வைர மூக்குத்தியுடன் வலது கரத்தில் ருத்ராட்ச மாலையும் இடது கரத்தை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக்கோலத்தில் காட்சி தருகிறார் இக்கோவில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டது வடக்கே உள்ள பிரதான வாயிலில் அம்மன் உலா தினமும் நடைபெறும் .ஊஞ்சல் மண்டபம், மணிமண்டபம், சபா மண்டபம் என பல மண்டபங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.இங்கு 9-தீர்த்தங்கள் உள்ளதாக ஐதீகம் கிழக்கே வங்காள விரிகுடாவில் சாவித்திரி காயத்திரி சரஸ்வதி, கன்யா விநாயகா தீர்த்தங்களும் வடக்கு பாப விநாச தீர்த்தமும் கிழக்கே இந்துமாக்கடலில் மாத்ரு, பித்ரு தீர்த்தங்களும் மேற்கே அரபிக் கடலில் ஸ்தானுதீர்த்தமும் இருக்கின்றன பௌர்ணமி அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் இவற்றில் பக்தர்கள் நீராடி அம்மன் அருள் பெறுகின்றனர் .பகவதி அம்மனை தரிசித்தால் தான் காசி யாத்திரை முழுமை அடையும் என்பது ஐதீகம் குழந்தை இல்லாத தம்பதிகள் 11 கன்னிகைகளுக்கு பூஜை செய்து தானங்கள் செய்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் 11 கால பூஜை நடைபெறுகிறது ஆண்பக்தர்கள் கோயிலுக்குள் சட்டை அணிந்து செல்ல அனுமதி இல்லை வைகாசி உற்சவமும் நவராத்திரி விழாவும் மிக முக்கியமானவை. சுசீந்திரம்

"சுசி" என்றால் தூய்மை அடைதல் என்று பொருள் இந்திரன் இங்கு வந்து தூய்மை அடைந்ததால் சுசீந்திரம் என்று வழங்கலாயிற்று தானுமாலயன் கோயில் என்று அழைக்கப்படும் இக் கோயில் கன்னியாகுமரியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோயில் உள்ள அனுமார் சிலை 22 அடி உயரம் உடையது நாட்டிய நங்கை வெற்றிலை மடித்து தரும் மங்கை குடைபிடித்த கட்டழகி போன்ற சிலைகள் உயிருள்ளவை போன்று இருக்கும் இது தவிர ஊஞ்சல் மண்டபம் சித்திர சபை வசந்த மண்டபம் வெண் கல்லாலான நந்தி ,பெரிய ஆஞ்சநேயர், கணேசன் திருவுருவம், பாவை பெண்களின் அரிய கலை வடிவங்கள் இந்திரனின் கதை கூறும் சுவர் ஓவியங்கள் மூலிகை ஓவியங்கள் போன்றவை காணத்தக்கவை.

திருநந்திக்கரை குகை கோயில்

பாறையில் அமைக்கப்பட்ட கோயிலுள்மழை நீர் புகுவதற்கு வாயிலும், புகுந்த மழை நீர் வாயிலுக்கு வராமல் மேலே செல்ல ஓடையும் அழகு பெற அழைக்கப்பட்டுள்ளன .

திருவட்டாறு

முப்புறமும் ஆறு சூழ்ந்த தீபகற்பமான இவ்வூர் நாகர் கோவிலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வளைந்து வட்டமாக ஆறு இருப்பதால் வட்டாறு என்று ஆற்றின் பெயரே நிலைத்து விட்டது . இக்கோவிலின் 18 அடி சதுரமும் மூன்றடி உயரமும் உள்ள ஒற்றைக்கால் மண்டபமும் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட லட்சுமி உருவங்களும் கோயிலின் கூரையில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சங்கிலியும் கோயிலின் கதவிலும் அதிசயத்தக்க வேலைப்பாட்டுடன் சிற்பங்களும் இங்கு காணத்தக்கவை

வேளிமலைகுமாரர் கோயில்

இவ்வூர் நாகர்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை சோலை சூழலில் காணப்படுகிறது இங்கு வள்ளி திருமணத்தை குறிக்கும்படியான வள்ளிச்சோலை ,கிழவன் சோலை என்ற இடங்கள் உள்ளன. முருகன் வள்ளியை மணந்த திருமண நிகழ்ச்சியே இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை" குறவன் படுகளம்" என்று அழைக்கின்றனர் முருகப் பெருமானை குறிக்கும் வேலன், வேள் என்ற சொற்களே குமரனை குறிக்க வேளி என்று ஆகிவிட்டது. வேளி என்னும் சொல் திருமணம் என்ற பொருளில் மலையாள மொழியில் வழங்கி வருகிறது. முருகன் இங்கு வள்ளியுடன் தான் இருக்கிறார்

அவ்வையார் அம்மன் கோயில்

இவ்வூர்(தாழாக்குடி) அவ்வையை அம்மனாக வழிபடும் இடமாக நாகர்கோவிலில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தமிழ்நாட்டில் அவ்வையாருக்கு கோயில் உள்ள ஒரே ஊர் இவ்வூராகும் .ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் பெண்கள் இங்கு கொழுக்கட்டை அவித்து வழிபாடு செய்வது பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

Tags

Next Story