ஆயுள் விருத்தி தரும் ஆலயத்தில் கொடியேற்ற விழா

ஆயுள் விருத்தி தரும் ஆலயத்தில் கொடியேற்ற விழா

பஞ்சமுக கொடியேற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றம்
சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சாமி காலசம்கார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட விரட்ட தளங்களில் ஒன்றாக திகழ்கிறது வருடத்திற்கு 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே ஸ்தலமாகும் மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாளையத்தில் ஆண்டுதோறும் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி சித்திரை முதல் நாள் பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தில் கட்டளை தம்பிரான் சாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மேலும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந்தேதி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சாமிக்கு திருக்கல்யாணம், 19-ந் தேதி இரவு காலசம்ஹார திருவிழா, 21-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story