கழுகுமலை முருகன் கோயில்!

கழுகுமலை முருகன் கோயில்!

கழுகுமலை முருகன் கோயில்

ஒரே கல்லால் ஆன குடைவரைக் கோயில் கழுகுமலை முருகன் கோவில் இந்த கோவில் ஆனது கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது பத்தாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட கழுகுமலை முருகன் பாடல் பெற்ற தலமாகும் சமணர்கள் இங்கே கழுவேற்றப்பட்டதாலும் கழுகுகள் தங்கும் மலை என்பதாலும் கழுகுமலை என பெயர் பெற்றது அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்து பாடி இருக்கிறார் 300 அடி உயர கழுகுமலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது கோயிலுக்கு செல்லும் வழியில் புத்தர் சிலையும் ஏராளமான சமண விக்கிரகங்களும் சுணையுடன் கூடிய சிறிய கோயிலும் உள்ளன. இங்குள்ள சிவன் கோயில் ம லையின் மற்றொரு பகுதியில் மேலிருந்து கீழாக குடைந்து வெட்டப்பட்ட கோயில் ஆகையால் வெட்டுவான் கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது பாறைக்குள் சதுரமாக 30 அடி ஆழத்தில் குடைந்து அதன் நடுப்பகுதியில் கோயில் உண்டாக்கப்பட்டிருக்கிறது இக் கோயிலின் நீளம் 47 அடியும் அகலம் 24 அடியும் உயரம் 30 அடியும் கொண்டது கோபுரத்தின் உச்சியில் தாமரை இதழ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் பாண்டியரின் ஒற்றை கல் தளிஆகும் இந்த தளத்தின் அருமையை உணர்ந்து அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழுகுமலை முருகனை பாடியுள்ளார்.

Tags

Next Story