கரூர் பசுபதீஸ்வரர் கோயில் !

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் !

பசுபதீஸ்வரர் கோயில்

தேவார பாடல் பெற்ற ஏழு தலங்களுள் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்று. பேரரசர் சோழனின் ஆன்மீக குருவும், தஞ்சை பெரிய கோயிலின் லிங்க திருவுருவை பிரதிஷ்டை செய்தவரும், திருவிசைப்பா இயற்றிய வருமான கருவூர் தேவர் அவதரித்த ஊர் இந்த கரூராகும். கொங்கு நாட்டு சிவ ஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும், ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம் ,தசாவதாரம் ஆகியவை கலைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன .உட்கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ் சோழர் மண்டபம் உள்ளது. புகழ் சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர் .இவர் கருவூர் பகுதியை ஆண்ட மன்னர் ஆவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கரூர்க்கு உண்டு. கோவிலுக்குள் இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காண வேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும் .பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும் படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். கிபி 14ஆம் நூற்றாண்டில் கரூர்க்கு வந்த அருணகிரிநாதர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி தன்னுடைய திருப்புகளில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7- பாடல்கள் உள்ளன. இத் தளத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களுடனும், 12 திருகரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story