மகாசிவராத்திரி வழிபாடு !!

மகாசிவராத்திரி வழிபாடு !!

மகாசிவராத்திரி வழிபாடு

முதல் கால பூஜை:

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்

அபிஷேகம் - பஞ்சகவ்யம்

அலங்காரம் - வில்வம்

அர்ச்சனை - தாமரை

நிவேதனம் - பால்

அன்னம் தூபம் - சாம்பிராணி

தீபம் - புஷ்ப தீபம்


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...


2-ம் கால பூஜை:

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்

அபிஷேகம் - பஞ்சாமிர்தம்

அலங்காரம் - குருந்தை

அர்ச்சனை - மல்லிகை, முல்லை

நிவேதனம் - பாயசம்

தூபம் - குங்கிலியம்

தீபம்- நட்சத்திர தீபம்

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே

3-ம் கால பூஜை :

வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோத்பவர்

அபிஷேகம் - தேன்

அலங்காரம் - கிளுவை, விளா

அர்ச்சனை - வில்வம், சாதி மலர்

நிவேதனம் - எள்அன்னம்

தூபம் - தேவதாரு

தீபம்- ஐந்து முக தீபம்

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க அரிய அதில் அரிய அரியோன் காண்க மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க மேலோடு கீழாய் விரிந்தோன் காண்

நான்காம் கால பூஜை;

வழிபட வேண்டிய மூர்த்தம் - ரிஷபாரூடர்

அபிஷேகம் - கருப்பஞ்சாறு

அலங்காரம் - கருநொச்சி, ரோஜா

அர்ச்சனை - நந்தியாவட்டை

நிவேதனம் – வெண்சாதம்

தூபம் - லவங்கம்

தீபம் - மூன்று முக தீபம்


ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி பாகம் பெண் உரு ஆனாய் போற்றி பராய்த் துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி..

Tags

Next Story