பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

பழனி மலை மீதுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் காலத்தால் பழமையானது இக்கோயிலில் உள்ள மூலவர் திருவுருவம் போகர் சித்தரால் 81 வகையான நவபாஷானத்தால் செய்யப்பட்டது என்பர் பல ஆயிரம் ஆண்டுகளாக பாலும் தயிரும் தேனும் சந்தனமும் மற்றும் தண்ணீரும் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டும் அவற்றை இத் திருவுருவம் இத்தனை காலம் தாங்கி நிற்பது வியக்கத்தக்கதாகும் தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்க செய்யும் வல்லமை இந்த நவபாஷாணத்திற்கு உண்டு 1900-ஆம் ஆண்டுக்குப் பிறகே இக்கோயில் புகழ்பெற தொடங்கியது தமிழ்நாட்டில் அதிக வருமானம் பெறும் திருக்கோயில்களுள்இக்கோயிலும் ஒன்றாகும். மூலவரின் நவபாசன சிலையை உருவாக்கிய போகர் சமாதி கோவிலில் தென்மேற்கு மூலையில் உள்ளது இவருக்கும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது .மேலும் மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த மலைக்கோவிலின் இருபுறமும் நாயக்கர் மண்டபங்களும் 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன கருவறை மீது தங்க விமானமும் உள்ளது இந்த கோவிலுக்கு ஏராளமான மானியங்களை அளித்த சேர மன்னன் சேரமான் சிற்பம் இக்கோவிலில் இடம் பெற்று இருக்கிறது பக்தர்கள் பழனிக்கு பல்வேறு விதமான காவடிகளை எடுத்து வந்தும் யாத்திரையாக நடந்து வந்தும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர் சங்கத்தமிழ் இலக்கியங்களின் பழனி திருத்தலம் பற்றிய பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன அகத்தியர் ஔவையார் நக்கீரர் கச்சியப்பர் பொய்யாமொழி புலவர் உள்ளிட்டவர்கள் இந்த கோவிலை பாடி சிறப்பித்துள்ளனர்.இதன் மலை உச்சியை சென்றடைய 697 படிகள் கொண்ட படிக்கட்டு பாதையும் யானை பாதை நிலுவை ரயில் ரோப் கார் என 4- வழிகள் உள்ளன .1996 இல் இங்குதான் இந்தியாவிலேயே முதன்முதலாக இழுவை ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது . மலையில் ஆசிமுகத் தீர்த்தம் தேன் தீர்த்தம் அமுத தீர்த்தம் ஞான தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன இதன் அடிவாரத்தில் வையாபுரி குளம் சண்முக நதி சரவணப் பொய்கை என மூன்று தீர்த்தங்கள் உள்ளன பழம் ஒன்றிற்காக பிணக்குக் கொண்ட முருகனை பழம் நீ என அழைத்து சிவபெருமான் முருகனை இம்மலையில் அமர்த்திய புராண நிகழ்ச்சியை ஒட்டி பழம் நீ என இவ்வூர் வழங்கப்பட்டு இப்போது பழனி என்று மருவியிருக்கிறது என்பர். பொதிணி என்னும் பெயரை திரிந்து பழனி என்று ஆயிற்று என்றும் கருதப்படுகிறது.

Tags

Next Story