கரூர் மாவட்டத்தின் வழிபாட்டுத் தலங்கள்
கரூர் மாவட்டத்தின் வழிபாட்டுத் தலங்கள்
1 .ரத்தினகிரி நாதர் கோயில்
ரத்தினகிரி என்றும் திருவாட்போக்கி என்றும் வழங்கப்படும் இவ்வூர் குளித்தலை ரயில் நிலையத்திலிருந்து தெற்கே மணப்பாறைக்கு செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருணாச்சலம், சிவாய மலை என்ற பெயர்களும் இதற்கு உண்டு. கோயில் மலைமேல் ஏறுவதற்கு ஏறத்தாழ ஆயிரம் படிகள் உள்ளன .12 ஆண்டுக்கு ஒரு முறை "இடிபூசை " நடைபெறுகிறது . இவ்வூரில் அகத்திய முனிவர் நண்பகல் வழிபாட்டு செய்ததனால் இன்றும் நண்பகல் வழிபாடே நடைபெறுகிறது. இதனால் இறைவனை மத்தியான சுந்தரர் என்றும் .அய்யர்மலை என்றும் அழைக்கிறார்கள். இது அப்பர் பதிகம் பாடிய தளமாகும்.
2. மரகதாசலர் கோயில்
குளித்தலை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்கம்பத்துறையிலிருந்து காவிரியை கடந்து சென்றால் திரு லிங்கநாத மலையை அடையலாம் .கோயிலை அடைய சுமார் 500 படிக்கட்டுகள் உள்ளன. இது சம்பந்தரால் பாடல் பெற்றது . ஒரே நாளில் காலையில் கடம்பர் கோயிலையும், நண்பகலில் ரத்தினகிரியையும் ,மாலையில் மரகதாசலரையும் கண்டு வழிபடல் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது
3.பசுபதீஸ்வர் கோயில்
கொங்கு நாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமைமிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புகளை உள்ளடக்கியது. கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2 .65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 63 நாயன்மார்களின் ஒருவரான எறிபத்தநாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு.
4.திருவெஞ்சமா கூடல் குடகனாற்றின் கிழக்கு கரையில் உள்ள இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த சிவஸ்தலம் ஆகும் .தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான் என்பது ஐதீகம் .இக்கோயிலின் வெளி சுற்றுச்சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் தருவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன.