கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு 

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் மறுபிறவி போக்கும் தலமான வேதாந்தநாயகி உடனாய விசுவநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு விஸ்வநாத சுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு. பாடல் பெற்ற தலமான இங்கு பிரதோஷம், மாசி மகம் ஆகிய நாட்களில் மட்டும் சூரிய வாசல் திறக்கப்படுவது வழக்கம்.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் ஆலயத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். அப்போது விஸ்வநாதர், வேதாந்தநாயகி மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனாதி திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு வெள்ளி கவச புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் பிரகாஷ் சிவாச்சாரியார் செய்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விஸ்வநாதரை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு ருத்ராட்ச பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆலய உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு உமாதேவி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story