புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் - வழிபாட்டு முறை !!

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் - வழிபாட்டு முறை !!

புரட்டாசி மாதம் வழிபாட்டு முறை

புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியமான ஒன்று. புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது நன்மையை தரும். இந்த மாதத்தில் சிறந்த விரத முறையை கடைப்பிடித்தால் அந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.

முதலில் புரட்டாசி மாதம் முழுவது அசைவ உணவை மறந்துவிட வேண்டும். இந்த மாசம் முழுவதும் அசைவ உணவை தவிர்த்து முழு பக்தியுடன் பெருமாளை வேண்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமை அன்று தலுகை போட வேண்டும். முதல் சனிக்கிழமை போட்டால் மிகவும் நல்லது. புரட்டாசி விரதத்தில் இந்த தலுகை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தலுகை மூலம் கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

இந்த விரதம் பெண்கள் மட்டுமில்லை வீட்டில் இருக்கும் அனைவரும் இருக்கலாம். விரதத்தை முடிக்கும் வரை பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் இருக்க வேண்டும். முக்கியமாக எமகண்டம் தொடங்குவதற்குள் பூஜையை முடித்திட வேண்டும்.

காக்கைக்கு இலையில் உணவு வைத்துவிட்டு அதை காக்கை எடுத்த பின்பு வீட்டில் இருப்பவர்களும் உண்ண தொடங்கலாம். வசதி இருந்தால் 2 அல்லது 4 பேரை வீட்டுக்கு அழைத்து வந்து உணவு கொடுக்கலாம். விரதம் முடிந்தவுடன் மாலை பெருமாள் கோயிலுக்கு கட்டாயம் சென்று வர வேண்டும்.

Tags

Next Story