பாவங்களை போக்க சித்தர் கூறிய பரிகாரங்கள் !!
spirituality
மனிதன் கஷ்டப்படுவது பித்ரு வழி பாவங்கள்தான், இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். எனவே நாம் நம்முடைய பாவங்கள் தீர சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
சிலர் தெரியமல் பாவம் செய்வார்கள், சிலர் அறிந்தே செய்வார்கள். அதனால் அவர்களின் பாவக்கணக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள். அது உண்மை தான்.
ஏழைகள், உணவுக்காக ஏங்கும் பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள், வாயில்லா ஜீவன்கள் என்று அடுத்தவர்களுடைய உதவியை மட்டும் எதிர்பார்த்து வாழும் உயிர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ, உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய இயலாதவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும். அன்னதானம் செய்வது நமது பாவத்தின் ஒரு பகுதியை நீங்கச் செய்யும்.
நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவிய பின்னர் பொரி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும், மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள்.மீன்களுக்கு பொரி போடுவதால் சிறு தோஷங்கள் நீங்கும்.நாம் அறிந்து அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் போக்கும் சக்தி இந்த மீன்களுக்கு இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர்.
புறாக்களுக்கு உணவளிப்பது பூர்வ ஜென்ம சாபத்தை போக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. புறாக்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை, தனியா போன்ற தானியங்களை இரையாக வைப்பது நமக்கு நிறைய புண்ணியங்களை சேர்க்கும்.
தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய நல்ல நாளாகும், அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை. பௌர்ணமி. ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள். ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .
தினமும் சிவ பெருமானுக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.