வண்ணமின் விளக்கில் சீதாதேவி மாரியம்மன்

வண்ணமின் விளக்கில் சீதாதேவி மாரியம்மன்

 ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன்

மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் 74ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா. வீடுகள் தோறும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீதளாதேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர். பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் 74ஆம் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீசீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சீதளாதேவி மாரியம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. விடியவிடிய நடைபெற்ற வீதியுலாவில் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு வீடுகள் தோறும் பொதுமக்கள் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story