ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழா கோலாகலம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில்சிவராத்திரி விழா கோலாகல நிகழ்ச்சியில் பக்தர்கள் விடிய விடிய கோவிலை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழா: பரத நிருத்தியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் சிவராத்திரி விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய கோவிலை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருள்மிகு தர்மசம்வர்தனி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி மாலை 5:00 மணிக்கு மூலவர் கைலாசநாதர் அம்பாள் பெரியநாயகி, சரக்கொன்றை கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். உற்சவர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கோவிலைச் சுற்றி வலம் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். 43 ஆம் ஆண்டாக மகா சிவராத்திரி விழா விமர்சையாக கோயில் முழுவதும் வண்ண அலங்காரங்கள் செய்து சிறப்பாக காட்சி அளித்தது. பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக என பக்தி கோஷங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். முதல் கால பூஜை, பஞ்சகலச பூஜை, பஞ்சகவ்ய பூஜை, ஹோமம் மற்றும் இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை என தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ பஞ்சலிங்க பக்தர்கள் குழு சார்பில் இரண்டாம் ஆண்டாக பரத நிருத்தியாலயா நாட்டிய அஞ்சலி குழுவினரின் சார்பில் நாட்டியாஞ்சலி,இயல் இசை நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட பரத நாட்டிய குழுவைச் சேர்ந்த குழந்தைகளின் இசை, பரத நாட்டியம் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீ சிவசக்தி சபரி குழுவினரின் சார்பில் பத்தாம் ஆண்டாக அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கோவில் சிறப்பு பூஜையை உமாபதி சிவம், தட்சிணாமூர்த்தி சிவம், ஸ்ரீ மது தில்லை நாதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Next Story