எருமை கிடா மைதானத்தில் சூரசம்ஹாரம்

எருமை கிடா மைதானத்தில் சூரசம்ஹாரம்

சூரசம்ஹார நிகழ்ச்சி

எருமை கிடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தசரா பண்டிகை வட மாநிலங்கள் மற்றும் மைசூரில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுதை அடுத்து நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14ம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடா்ந்து பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 11 கோயில்களில் தசரா திருவிழா தொடங்கியது.10 தினங்கள் நடைபெற்ற நவராத்திாி தசரா திருவிழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்றது.10ம் திருநாளான விஜயதசமியையொட்டி இரவு அம்மன் கோயில்களிலிருந்து சிம்ம வாகனத்தில் 'போா்கோலம் புாிந்து வண்ண மின்னொளியில் 11 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரத வீதிகளில் வலம் வந்தன. இதன் காரணமாக பாளையங்கோட்டை பகுதி முழுவதும் விழா கோலமாக இருந்தது. இந்த நிகழ்வின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று அதிகாலையில் நடைபெற்றது எருமை கிடா மைதானத்தில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story