திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் இதிகாச புராணம் !!

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் இதிகாச புராணம் !!

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் 

ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படும் ஏழு க்ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது; புராணங்கள் மற்றும் குறிப்பாக சகந்த புராணம் மற்றும் பத்ம புராண நூல்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் மற்றும் சிறப்புகள் அடங்கியுள்ளன.

இந்துக்கள் கடவுளாகப்போற்றும் மகா விஷ்ணு இவ்விடத்தில் இருந்து கொண்டு, திவாகர முனி மற்றும் வில்வமங்கள சுவாமியைப் போன்ற இந்திய முனிவர்களுக்கு காட்சி அளித்து பரிபாலித்ததாக பாரம்பரியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.

வேறு ஒரு கதையின் படி, புலைய தம்பதிகள் மகா விஷ்ணுவை குழந்தையாகப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டதாக தெரிவிக்கிறது. அக்குழந்தையும் அந்த தம்பதியினர் கையால் படைத்த அன்ன ஆகாரத்தை உண்டு களித்ததாக கதைகள் கூறுகின்றன.

அதே போல, திவாகர முனிவருக்கு, முதன்முதலாக இறைவன் காட்சியளித்த பொழுது, அவருக்கு உடனுக்குடன் கையில் கிடைத்த ஒரு பழுக்காத மாங்கா மற்றும் ஒரு தேங்காயை ஒரு தட்டில் வைத்து இறைவனுக்கு படைத்ததாகவும், அவ்வழியில் முதன்மை பூஜையை இறைவருக்கு செய்ததாகவும் மக்கள் நம்பி வருகின்றனர்.

இதை நினைவில் கொண்டு, இக்கோவிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமானது, அரிசியால் படைத்த அன்னப்பிரசாதம் ஒரு தேங்காய் கொட்டையில் வைத்து அளிக்கப்படுகிறது.

Tags

Next Story