துர்க்கை அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
பல்லவர்கால துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மன் கோவிலில் 208 பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை செய்தனர்.
உத்திரமேரூரில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 26ம் ஆண்டு நவராத்திரி விழா, ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் நவராத்திரி விழாவின் போது, ஒவ்வொரு ஆண்டும் முக்கிய கருப்பொருட்களை முன்னிலை படுத்தி விளக்கு பூஜை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு, மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் மற்றும் தேச வளர்ச்சியை முன்னிறுத்தி விளக்கு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் 7ம் நாளான நேற்று, 208 பெண்கள் விரதமிருந்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டனர். 208 பெண் பக்தர்களும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து விரதம் இருந்து விளக்கேற்றி பூஜை செய்தனர். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடுகள் நடந்தன.
Next Story