கடுகுசிதறினால் சண்டை உண்டாகுமா?

கடுகுசிதறினால் சண்டை உண்டாகுமா?

கடுகு

கடுகு தரையில் விழுந்து சிதறினால் வீட்டில் அன்று கலகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. யுக்தியுடன் சிந்தனை செய்தால் இதுவும் நிஜம்தான்.

மிகக்கவனமாகவே கடுகு கொடுத்து வாங்கி வருவது. தன் கையிலிருந்து தரையில் போகாமலிருக்க கொடுப்பவரும் வாங்கும் போது சிதறாமலிருக்க வாங்கும் நபரும் மிகக் கவனமாக இருப்பது வழக்கம்.

மிகச் சிறியதும் உருண்டு போவதுமான பொருளான கடுகு தரையில் விழந்து சிதறினால் மறுபடியும் அதைச் சேகரித்து எடுப்பது மிகவும் கடினமான வேலை அவ்வாறு கடுகு நஷ்டபடுத்திய நபரைப் பிறர் கண்டனம் செய்வது இயற்கையானதே.

இதனால் அதிகக்கவனம் செலுத்தத் தூண்டுமாறு "கடுகு சிதறினால் கலகம்" என்ற மூதுரை வழக்கத்துக்கு வந்தது.

Tags

Next Story