வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது!!

commercial cylinder
சர்வதேச சந்தயில் கச்சா எண்ணையின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சிலிண்டர்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில், இந்த மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை நேற்று ரூ.1,823.50 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ரூ.34.50 குறைந்து வணிக பயன்பாட்டுக்கான ஒரு சிலிண்டர் விலை ரூ.1,789க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் 14.5 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான விலை மாற்றமின்றி ரூ. 868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
